கச்சதீவில் மீன்பிடிக்க உரிமை கோரி இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாட தீர்மானம்
கச்சதீவு கடற்பரப்பில் இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்குக் காணப்படும் பாரம்பரிய உரிமைப் படி மீன்படிக்கும் அனுமதியை இந்திய மத்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தை அணுகி பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
கச்சத்தீவு கடல் பகுதியில் பாரம்பரிய உரிமைப்படி மீன்பிடிக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மீனவர் நலச் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கச்சத்தீவை 1974 இல் இலங்கைக்கு கொடுத்த போது இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சுக்களும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தப் பிரிவு 6-ல் குறிப்பிட்டுள்ளபடி இருநாட்டு மீனவரும் பாரம்பரிய உரிமைப்படி மீன்பிடிக்க அனுமதி வழங்ப்பட்டுள்ளது.
இந்த பிரிவு 6 இல் உள்ளதை அமல்படுத்தக் கோரிய இவ்வழக்கில் இலங்கை அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது என வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் குழு தீர்ப்பளித்துள்ளது.
மேலும், கச்சத்தீவு பிரச்சனையில் பேச்சுவார்த்தை மூலம் மத்திய அரசு தான் தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதிகள் இத்தீர்ப்பின் போது கூறியுள்ளதாகவும் அந்நாட்டு உத்தியோகபுர்வ செய்திகள் குறிப்பிடுகின்றன