அமைச்சர் எஸ்.பி.யாழிற்கு விஜயம்
வாழ்வின் எழுச்சி சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்பு குறித்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டமானது யாழ். மாவட்ட சமூர்த்தி ஆணையாளர் ஆ. மகேஸ்வரன் தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் பிரதம விருந்திரனாக சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்பு அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கலந்துகொண்டு, சமூர்த்தி பயனாளிகளிற்கு, உத்தியோகத்தர்களின் அணுகுமுறை மற்றும் சமூர்த்தி பயனாளிகளுக்கான உதவித்திட்டங்களை வழங்குவது குறித்து கருத்துரைகளை வழங்கியிருந்தார்.
சமூர்த்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்புக்களின் மூலம் பயனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த முற்படுவதுடன், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் வாழ்வாதார கடன் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் கடன் திட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கான சுற்றுநிருபங்கள் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.