Breaking News

அகதிகளுக்கு உதவ சர்வதேச அமைப்புகளுக்கு அனுமதி



இந்தோனேஷியாவில் தற்காலிகமாக தங்கவைக்க ப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 44 பேருக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ இந்தோனேஷியா அரசாங்கம் அனுமதி யளித்துள்ளது.

கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன.

கடந்த 11 ஆம் திகதி இந்தோனேஷியாவின் ஆசே பகுதி லோகாங்கா கடல் பகுதியில் இயந்திர கோளாறு காரணமாக அகதிகள் படகு நடுக்கடலில் தத்தளிப்பதை அந்த நாட்டு மீனவர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் இந்தோனேஷிய கடற்படைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்தது கடற்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

குறித்த படகில் 9 சிறுவர்கள், பெண்கள் உட்பட 44 பேர் இருந்தனர். அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் இந்தோனேஷியாவில் தரையிறங்க கடற்படை வீரர்கள் அனுமதிக்கவில்லை. எனினும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களில் அழுத்தங்கள் காரணமாக தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.