மூன்றாவது முறையாகவும் கட்சியை தோல்வியடைச் செய்ய பசில் முயற்சி
இரண்டு முறைகள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை தோல்வியடைய செய்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மூன்றாவது முறையும் கட்சியை தோல்வியடையச் செய்ய செயற்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மத்திய குழு உறுப்பினர் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா குற்றச்சாட்டியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர உள்ளிட்ட கூட்டமைப்பை தோல்வி அடைய வைத்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அதனை அடுத்து நடந்த பொதுத்தேர்தலிலும் தோல்விடைய இதுவே காரணம் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்பொழுது மஹிந்த ராஜபக்ஷவை தலைமையாக கொண்டு பசில் ராஜபக்ஷ இன்னுமொரு சக்தியை உருவாக்க திட்டமிட்டு வருவதாகவும், இதன் மூலம் அவர் மூன்றாவது முறையும் கட்சிக்கு தோல்வியை ஏற்படுத்தித்தர முயற்சிப்பதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா மேலும் தெரிவித்தார்.