Breaking News

முதல்வருக்கெதிராக கையெழுத்து வேட்டை -உள்ளே என்ன நடக்கிறது(விபரம்)

வடமாகாண சபை முதல்வருக்கும் அமைச்சுக்களில் சிலருக்கும் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவரும் அடுத்த முயற்சியில் சுமந்திரன் தரப்பு இறங்கியிருப்பதாக தமிழ் கிங்டத்திற்கு நம்பகரமாக அறிய வருகின்றது.

முதல்வர்மீது நேரடியாக எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கமுடியாது என்பதால் அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான விவசாய அமைச்சர்மீதே வழமைபோல தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது. விவசாய அமைச்சு பறிபோகும் பட்சத்தில் முதலமைச்சர் தானாகவே அரசியலிலிருந்து ஒதுங்கும் வாய்ப்பிருப்பதாக அடுத்த தமிழரசு தலைமை கனவிலிருக்கும் சுமந்திரன் தரப்பு கணக்கு போட்டுள்ளது.

ஏனைய அமைச்சுக்கள்மீது தமது ஆளுகையை செலுத்த முடிகின்றபோதும் முதலமைச்சு மற்றும் விவசாய அமைச்சர்கள் அவர்களுடைய ஆளுகைக்கு கட்டுப்படாத நிலையில் இந்த மோதல் தொடர்ந்தவண்ணமே உள்ளது. 

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வடமாகாண அமைச்சுக்கள்மீது குற்றம் சாட்டப்பட்டு குறிப்பாக விவசாய அமைச்சுக்கு எதிராக சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து களமிறங்கிய சதித்திட்டம் முதல்வரிடம் எடுபடாமல் போகவே அடுத்தகட்டமாக மாற்று வழிகளை கையாழும் நோக்கில் அதே அணியினர் களமிறக்கப்பட்டிருப்பதாக அறியவருகின்றது.

இதில் ஐ.தே.க நெருங்கிய ஆதரவாளரும் சுமந்திரனால் போனஸில் நியமிக்கப்பட்ட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் மற்றும் வழமையான செல்லப்பிள்ளைகளாக வலம்வரும் மாகாணசபை உறுப்பினர்களான ஆனல்ட் ,சயந்தன் மற்றும் சுகிர்தன் ஆகிய நால்வர் குழு இதில் தீவிரமாக செயற்படுவதற்கு தமிழரசு கட்சி தலைமையால் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அதன் முதல் கட்டமாக களமிறங்கிய அணியினர் யாழிலுள்ள உறுப்பினர்கள் ஏழுபேரிடம் கையொப்பம் வாங்கியிருப்பதாகவும் அதற்காக முல்லையில் கையொப்பம் வாங்கும் நோக்கில் முல்லைத்தீவுக்கு ஒரு அமைச்சு தரப்படும் என்ற உத்தரவாதம் அன்ரனி ஜெயநாதன்ஊடாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது. கையொப்பம் பெற்றுவரும் இவர்கள் எதிர்வரும் அமைச்சு மாற்றங்களில் தங்களுக்கு ஏற்றால்போல புதிய அமைச்சு முகங்களையும் அறிமுகப்படுத்தி கையொப்பம் பெறும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் அறியவருகின்றது.

இது தொடர்பில் வவுனியாவில் கையொப்பம் பெறுவதற்காக மேற்குறிப்பிட்டவர்களில் சுகிர்தன் தவிர ஏனைய மூவரும் மாகாணசபை உறுப்பினரின் இல்லத்திற்கு சென்றதாகவும் ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

கையொப்பம் வாங்கும் குழுவினர் சிலகுற்றச்சாட்டுக்களை முன்னரும் குறிப்பிட்டிருந்ததால் அவை கருத்திலெடுக்கப்படாது என்பதால் இம்முறை சிலருடைய சத்திய கடதாசிகளை பெற்றுக்கொள்வதிலும் சட்டத்தரணி சயந்தன் ஆர்வம்காட்டி வருவதாகவும் வடமராட்சியை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இவர்களின் இந்த செயற்பாடு அறிந்த முதலமைச்சர் நேற்றைய தினம் இது தொர்பில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கையொப்பம் வாங்கும் நபர்கள் சிபார்சு செய்யும் அமைச்சுக்கள்

முதல்வர் தனது கருத்தில்.

மேலும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திடம் பறிபோன புனர்வாழ்வு ,மீள்குடியேற்ற அமைச்சு சம்பந்தமாகவும் போக்குவரத்து அமைச்சரின் கலதாரி விடுதி சம்பவம் தொடர்பாகவும் நாளை பார்ப்போம்.