யாழில் 2 இலட்சம் ரூபாய் கள்ள நோட்டு சிக்கியது
இதுவிடயமாக மேலும் செய்திகளை அறியும் முகமாக ஆராய்ந்தபோது இந்த கள்ளநோட்டு யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இயங்கிவரும் ஆண்ட்ரா பிறிண்டிங் கொம்பனியில் அச்சிடப்பட்டதாக அங்கிருந்து கிங்டத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
நேற்றைய தினம் காலை இளவாலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் திருமண செலவுக்காக மானிப்பாயிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்று பதினேழு பவுண் ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர். இவ்வாறு அடகு வைத்து அவர்கள் வங்கியிலிருந்து 4இலட்சத்து 90ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்தை பெற்றுச் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் அப் பணத்தை குறித்த திருமண மண்டபத்திற்கு செலுத்தச் சென்ற போது அதில் சுமார் இரண்டு இலட்சம் ரூபா போலி நாணயத்தாள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக குறித்த தரப்பினரால் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இது தொடர்பாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தலமையில் இளவாளை பொலிஸார், குறித்த வங்கி அதிகாரிகளிடமும் முறைப்பாட்டை செய்தவர்களிடமும் விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கிங்டத்தின் விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.