Breaking News

மகிந்தவின் பாதுகாப்புக் குறைக்கப்படவில்லை - பாதுகாப்புச் செயலர்



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக் குறைக்கப்படவில்லை என்று பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நேற்றுடன் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த மே மாதம் இராணுவத் தலைமையகத்தின் உத்தரவையடுத்து, மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்த 50 இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தனர்.

எஞ்சிய 54 இராணுவ கொமாண்டோக்களும் நேற்றுடன் திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக, மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு முற்றாக சிறப்பு அதிரடிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட  பாதுகாப்பு அமைச்சர் கருணாசேன ஹெற்றியாராச்சி, மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக் குறைக்கப்படவில்லை, இராணுவக் கொமாண்டோக்களுக்குப் பதிலாக,  காவல்துறையின் முக்கிய பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பிரிவினர் அவரது பாதுகாப்பைப் பொறுப்பேற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.