தனது குரல்வளையை அறுத்துக் கொள்போவதாக மஹிந்த எச்சரிக்கை!
தனக்கு எதிராக 18 பில்லியன் டொலர் திருடியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிரூபித்தால் தனது குரல்வளையை அறுத்துக் கொள்வேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜப்பான் விஜயத்தில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ அங்குள்ள டைம்ஸ் பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
தான் 2015 ஆம் ஆண்டு தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தனக்கு எதிராக செயற்பட்டமையாகும் எனவும் அவர் அச்சஞ்சிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.