Breaking News

வெற்றி பெற்றிருக்காவிட்டால் உயிருடன் இருந்திருக்க மாட்டோம் : ராஜித



கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தமக்கு வாக்களிக்காமல் தோல்வியடைய செய்திருந்தால், ஜனாதிபதி, தான் உள்ளிட்ட பலர் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டோம் என்றும் இல்லாவிட்டால் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்திருப்போம் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு நேற்று (சனிக்கிழமை) விஜயம் செய்த அமைச்சர் ராஜித, மல்வத்து மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றார். அதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்குறித்தவாறு கூறினார்.

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த மக்கள் மாத்திரமே தம்முடன் இருந்ததாக குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியின் அர்ப்பணிப்பும் இதில் முக்கியத்துவம் பெறுவதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, அர்ஜூன மகேந்திரனின் பதவிக்காலத்தை நீடிக்கக்கூடாதென பலர் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து விரைவில் அறிந்துகொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.