Breaking News

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறும்!

வடக்குக் கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அரச படையினரை அகற்றிக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்படும் என அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.


வடக்கு கிழக்கிலிருக்கும் இராணுவத்தை வெளியேற்றும் நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் அனைத்துக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்த தூதுவர் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் என்றும் உறுதியளித்துள்ளார்.

அடுத்துவரும் இரண்டு வருடங்களுக்குள் இராணுவம் அகற்றிக்கொள்ளப்பட்டு தேவைக்கு ஏற்றளவு படையினர் மாத்திரம் நிலைநிறுத்தப்படுவர் என்றும் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.