Breaking News

சிவாஜிலிங்கத்தை சாடும் டிலான் பெரேரா



அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெற்கில் எதிர்ப்பு வெளியிட்டு வருவதைப் போன்று, வடக்கில் சிவாஜிலிங்கம் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜெனீவா விவகாரம் குறித்து ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே, இராஜாங்க அமைச்சர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

உள்நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் எழுந்தபோதும், சர்வதேசத்தில் இலங்கைக்கு நற்பெயர் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த டிலான், தற்போதைய ஜெனீவா விவகாரமும் இலங்கைக்கு சாதகமானதாக மாறிவிடும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லையென தெரிவித்தார்.

மேலும், உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் எந்த விதத்திலும் உள்ளீர்க்கப்பட மாட்டார்களென தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டிலான், சிலர் வெளியிட்டு வரும் போலியான பிரசாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டிய தேவையில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, மக்களும் இவ்வாறான கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில்லையென்றும் மக்களுக்கு நாட்டின் அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவேற்பட்டுள்ளதாகவும் டிலான் மேலும் தெரிவித்தார்.