கூட்டமைப்பு கேட்பதை எல்லாம் அரசாங்கம் வழங்காது
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் முடிந்தளவு கோரிக்கைகளை முன்வைத்தாலும், அரசாங்கம் உரியதை மாத்திரமே அவர்களுக்கு கொடுக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தம் வகையிலான புதிய சீர்திருத்தம் ஒன்றை ஏற்படுத்தும் வகையிலான புதிய சீர்திரத்தம் ஒன்றை ஏற்படுத்த கடந்த தேர்தல் காலங்களிலிருந்து அரசாங்கம் செயற்பட்டு வந்தது.
தேர்தலில் வெற்றியாக பெற்றுக்கொண்ட அரசியல் ஜனநாயகம் மற்றும் மக்கள் தனித்துவம் போன்ற உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியல் சீர்திருத்தம் உருவாக்கப்படும் என பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை மக்களின் யோசனைகள் உள்வாங்கப்பட்டு அரசாங்கம் உறுதியளித்த விதத்தில் நாட்டிற்கு பொருத்தமான புதிய தீர்வு திட்டம் அந்த ஆண்டிற்குள் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.