ஜனாதிபதி அதிரடி : அமைச்சரவையில் திடீர் மாற்றம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாரிய மாற்றங்களைக் கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருப்பதாக, அரசில் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
நல்லாட்சி அரசாங்கத்தின் சில அமைச்சர்களது செயற்பாடுகள் திருப்திகரமாகவும், திறனாகவும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், உள்ளூராட்சி மன்ற தேர்தலை இலக்காகக் கொண்டும், சில அமைச்சர்கள் முகங்கொடுத்துள்ள குற்றச்சாட்டுக்களைக் கருத்திற்கெடுத்தும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.
உள்ளூராட்சி சபைத்தேர்தல் எதிர்வரும் வருட முற்பகுதியில் நடைபெறவிருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெவ்வேறாக செயற்பட இரண்டு பிரதான கட்சிகளும் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த அமைச்சரவை மாற்றம் முக்கியமானதாகவும் கருதப்படுகின்றது.