மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை மன்னிக்க முடியாது - பொன்சேகா
போர்க்குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
யுத்ததில் வெற்றி அடைந்தமைக்காக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு என்றால் என்வென்று தெரியாத பொது எதிரணியினர் அரசியல் இலாபத்திற்காக தேசிய பாதுகாப்பு குறித்து உண்மைக்கு புறம்பாக கூச்சலிடுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு சம்பவத்துடன் வெளிநாட்டில் உள்ள பலருக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை என பொண்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் நாட்டில் உள்ள பெரும்பாலன மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தவிர்த்து வெளிய மாவட்டங்களில் வாழ்ந்துகொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.