Breaking News

டக்ளஸ்,தொண்டமான், அத்தாவுல்லா மீண்டும் அரசாங்கத்துடன் சங்கமம்



முன்னாள் அமைச்சர்களும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகன் தொண்டமான ஆகியோர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஈழ மக்கள ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கை தொழிலாளார் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளதாக விசேட பணிகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். 

கொழும்பில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற வகையில் கட்சியின் செயற்குழு கூடி சில தீர்மானங்களை மேற்கொண்டது. அதன்படி ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துள்ளன.

நல்லெண்ண ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் இனி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து, கட்சியின் அமைப்பாளர்களாக பணிபுரியவுள்ளனர் – என்றார்.