Breaking News

வித்தியா கொலை வழக்கு : தகவலறிந்த பொதுமக்கள் சாட்சியாக வருமாறு அழைப்பு



யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் சாட்சியாக வரவேண்டும் எனவும் அவ்வாறு வருபவர்களுக்கு நூறுவீதம் முழுமையான பாதுகாப்பை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இவ் வழக்கு நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் இதனைத் தெரிவித்தார்.

விசாரனையின் போது,
சம்பவம் தொடர்பில் இன்னுமொருவர் இரகசிய சாட்சியம் கூற இருப்பதாக குற்றப்புலனாய்வு அதிகாரி மன்றில் தெரிவித்தார்.

அத்துடன் சம்பவம் இடம்பெறுவதற்கு முதன் நாள் குறித்த பெண்ணை 9ஆவது சந்தேகநபர் கடத்துவதற்கு முயற்சித்திருந்தமையும் தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் மன்றில் தகவலளித்தனர்.

குறித்த வழக்கு தொடர்பாக முழுமையாக பரிசிலித்து பார்த்தும் சமர்பிக்கப்பட்ட அறிக்கையும் முழுமையாக பரிசிலித்தே மரபணு அறிக்கை தொடர்பாக தெரிவிக்க முடியும் என்று நீதிவான் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக அறிக்கை சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவ் அறிக்கை சமர்பிக்கப்படமை தொடர்பிலும் நீதிவானிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் நீதிவான் தெரிவித்திருந்தார்.


இதேவேளை நேற்று முன்தினம் வழக்கு விசாரனையின் போது சந்தேகநபர்களில் ஒருவர் தம்மை எவ்வாறு வேண்டுமாலும் விசாரணை செய்யுங்கள் ஆனால் எங்களது குடும்ப உறுப்பினர்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என கோரியிருந்தார்.

மேலும் வித்தியாவிற்கு நடந்த சம்பவம் தனது சகோதரிக்கு நடந்ததைப் போன்று இதற்கு நீதியான விசாரனை அவசியமெனவும் உண்மையான குற்றவாளிகள் இணங்கானப்பட வேண்டும் எனவும் அவ்வாறு பொலிஸார் செய்யாது விட்டால் நான் விடுதலையாகி வந்து அவனை கண்டுபிடிப்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த நீதிவான் குறித்த சந்தேகநபரது உறவினர்கள் சாட்சியை அச்சுறுத்தியமை தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக அவ் வழக்கு அடுத்த தவனையின் போது சட்டத்தரணி ஊடாக அது தொடர்பான விண்ணப்பங்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வித்தியா படுகொலை தொடர்பில் அறிந்த பொதுமக்கள் சாட்சியாக வரவேண்டும் எனவும் அவ்வாறு வருபவர்களுக்கு நூறுவீதம் முழுமையான பாதுகாப்பை நீதிமன்றம் வழங்கும் எனவும் நீதிவான் அறிவித்தார். இந்த நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.