Breaking News

இராணுவத்தினரது வர்த்தக நிலையங்களை புறக்கணிக்குமாறு கோரிக்கை

தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள இராணுவத்தினரது வர்த்தக நிலையங்களில் பொருட்களை புறக்கணிக்குமாறு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு இதுதொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் வர்த்தக நிலையங்களில்,

பொதுமக்கள் தங்கள் உடலை வருத்தி வியர்வை சிந்தி உழைத்த பணம், தமிழர் தாயகத்தில் பெரும் அச்சுறுத்தலாகவும் – இடையூறாகவும் இராணுவத்தினரது பயன்பாட்டுக்கு சென்றடையும் நிலைமைகள் தொடர்பில் ஒவ்வொரு பிரஜையும் தெளிவுற வேண்டும் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும், சிவில் நிர்வாக வெளியை வலியுறுத்தும் வகையிலும், இராணுவத்தினரது வர்த்தக நிலையங்களில் பொருள்களை கொள்வனவு செய்வதை முற்றாகத்தவிர்த்து புறக்கணிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.