Breaking News

இலங்கையின் பாதுகாப்பு முக்கியமானது – துருக்கி வெளிவிவகார அமைச்சர்


இலங்கையின் பாதுகாப்பும் உறுதித்தன்மையும் இந்தப் பிராந்தியத்துக்கும் அதற்கு அப்பாலும், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு தெரிவித்தார்.

இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த துருக்கி வெளிவிவகார அமைச்சர் நேற்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும்,  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சருடனான இருதரப்புப் பேச்சுக்களின் பின்னர், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு,

இலங்கையின் புவியியல் அமைவிடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால், இலங்கையின் பாதுகாப்பும் உறுதித்தன்மையும் இந்தப் பிராந்தியத்துக்கும் அதற்கு அப்பாலும், முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

துருக்கியும் இலங்கையும் பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு, கலாசாரம், சுற்றுலா, விவசாயம், சக்தி, கல்வி ,சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கும் இணங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நேற்றைய பேச்சுக்களின் போது, இருநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்குமிடையில் புரிந்துணர்வு உடன்பாடுகளும் கையெழுத்திடப்பட்டன.

அதேவேளை, இலங்கைக்கு 350 மில்லியன் டொலர் கடன் வழங்கவும் துருக்கி முன்வந்துள்ளது. துருக்கிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.