யாழில் 10,770 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை!
யாழ்ப்பாணத்தில் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்போது வரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து வருகைதந்த 955 குடும்பங்கள் உள்ளிட்ட 33 ஆயிரத்து 472 குடும்பங்களை இதுவரை மீள்குடியேற்றியுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் யாழ்.மாவட்டத்தைப் பொறுத்த வரையில் 10, 770 குடும்பங்கள் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சியமைத்த 2015 ஆம், மற்றும் 2106 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெல்லிப்பளை கோப்பாய் பிரேதச செயலாளர் பிரிவில் இருந்த உயர் பாதுகாப்பு வலயங்கள் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டன.
கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்த வலளாய் கிராமம் தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கடந்த வருடம் முதற்கட்டமாக ஆயிரத்து 58 ஏக்கர் நிலப்பரப்பும், இரண்டாம் கட்டமாக இவ்வருட முற்பகுதியில் 701 ஏக்கர் நிலப்பரப்பும் ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டன.
இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 759 ஏக்கர் நிலப்பரப்பில் மீள்குடியேறவன இதுவரை அரண்டாயிரத்து 125 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன.
யாழ் மாவட்டத்தில் ஏழு பிரதேச செயலர் பிரிவிலுள்ள 31 நலன்புரி முகாம்களில் 971 குடும்பங்களை சேர்ந்த மூவாயிரத்து 405 பேர் இன்னும் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.