காணாமல் போன விமானத்தின் பாகங்களும் உடல்களும் கண்டெடுப்பு
மத்தியதரைக் கடலில் 66 பேருடன் வியாழக்கிழமை விழுந்து நொறுங்கிய எகிப்து விமானத்தைக் கண்டறிந்ததாக எகிப்து ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
விழுந்து நொறுங்கிய எகிப்து ஏர் விமானத்தின் சிதறிய பாகங்களையும், அதிலிருந்த பயணிகளின் உடமைகளையும் எகிப்து விமானம், கடற்படைக் கப்பல்கள் ஆகியவை கண்டறிந்தன.
அலெக்ஸாண்டிரியா துறைமுகத்துக்கு வடக்கே 300 கி.மீ தொலைவிலுள்ள மத்தியதரைக் கடல் பகுதியில் அந்தப் பொருள்கள் கண்டறியப்பட்டன கிழக்கு மத்தியதரைக்கடலில் விழுந்த ஈஜிப்ட்ஏர் விமானத்தின் சிதிலங்களும் மனித சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாரிஸிலிருந்து கெய்ரோவுக்கு சென்றுகொண்டிருந்த இந்த விமானம் அறுபத்தி ஆறு பயணிகளுடன் நேற்று முன்தினம் வியாழனன்று கடலில் விழுந்தது.
37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம், 15,000 அடி உயரம்வரை வேகமாக விழுந்து, கடல்மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் இருந்தபோது, ராடார் பார்வையிலிருந்து அந்த விமானம் மறைந்ததாக கிரீஸ் ராணுவம் தெரிவித்தது.