Breaking News

ஊடகவியலாளரைத் தாக்க முயன்ற பிள்ளையான்

விளக்கமறியலில் உள்ள, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன், ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரான பிள்ளையான், நேற்று மாகாணசபை அமர்வில் பங்கேற்க வந்தார்.

அப்போது அவரைப் படம்பிடிக்க முயன்ற ஊடகவியலாளரை, பிள்ளையான் பாய்ந்து தாக்க முயன்றார்.எனினும், அவரை அழைத்து வந்த காவல்துறை மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள், அவரைத் தடுத்து, ஊடகவியலாளரைக் காப்பாற்றினர்.

கிழக்கு மாகாணசபை அமர்வில் பங்கேற்கச் சென்றிருந்த பிள்ளையானுக்கு நேற்று கைவிலங்கு மாட்டப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.