திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தலைமையில் இன்று புதன்கிழமை காலை 7.30 அளவில் திருகோணமலை சிவன் கோவிலடியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் க. துரைராஜசிங்கம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெனார்த்தனன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, போரில் ஈடுபட்டவர்கள் இறப்பதுண்டு, இந்த போரில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில், அவர்களை நினைவுகூறுவது எமது கடமை எனவும் தெரிவித்துள்ளார்.