யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பலி
யாழ்ப்பாணம் சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்துடன் மோதுண்டு முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுன்னாகம் ஆலடி பகுதியைச் சேர்ந்த சின்னராசா என்ற முதியவரே புகையிரதத்துடன் மோதுண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதுண்டே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.