மஹிந்த அரசாங்கத்தின் இரு உயரதிகாரிகள் கைது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உயர் பதவிகளை வகித்து வந்த இரு அதிகாரிகள், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள், கடந்த ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்களாக பதவி வகித்த, விலி கமகே மற்றும் ஏ.தஸநாயக்க ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதென குறிப்பிடப்படும், கம்பஹா பிரதேசத்திலுள்ள காணி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை இன்றைய தினமே கம்பஹா நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதிக்குற்ற விசாரணை பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.