பசில் கொள்வனவு செய்த காணி தொடர்பில் ; சர்ச்சை வெளியானது
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கொள்வனவு செய்த 16 ஏக்கர் காணி தொடர்பில் லட்சாதிபதி வர்த்தகர் திருக்குமரன் நடேசன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
சுமார் 5 மணித்தியாலங்களாக அவரின் வாக்குமூலம் நேற்று பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்குமரன் நடேசன், நாடாளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்சவின் கணவராவார்.
இதன்படி பசில் ராஜபக்சவுக்கு சொந்தக்காரராவார். திருக்குமரன் நேற்று காலை நிதிமோசடி பொலிஸ் பிரிவுக்கு அழைக்கப்பட்டு மாலையிலேயேவீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். மல்வானை என்ற இடத்தில் 2014ம் ஆண்டு 64 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட இந்த காணி திருக்குமரன் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் இந்த காணியின் பெறுமதி 125 மில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தநிலையிலேயே இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.