Breaking News

வடமாகாண அமைச்சுக்களின் பொறுப்புக்களில் மாற்றம்

வடமாகாண அமைச்சுக்களின் பொறுப்புக்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இன்று திங்கட்கிழமை மாலை வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர்  மற்றும் அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெறும் கலந்துரையாலிலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.


கடந்த ஆண்டு வடமாகாண முதலமைச்சர் வசமிருந்த சிறுவர் பாதுகாப்பு, மற்றும் புனர்வாழ்வு திணைக்களம் ஆகியன அதிக வேலைப்பளு காரணமாக ஏனைய அமைச்சுக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே வடமாகாண அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட திணைக்களங்களை மீள தாம் பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.