மஹிந்தவின் “யுத்த வெற்றி விழா” இரத்து
குருநாகலையில் நடைபெறவிருந்த “யுத்த வெற்றி விழா” இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவிருந்தது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.