தமிழகத்தில் அசைக்கமுடியாத சக்தியா ஜெயலலிதா?
இந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கும்,அடுத்த இடத்தில் வந்த திமுகவுக்கும் இடையே இருந்த சுமார் 11 சதவீத ஓட்டுகள் தான், வெற்றியை தீர்மானி்த்துள்ளன.
இதுவரை வெளியான முடிவுகளின்படி அதிமுகவுக்கு 41.8 சதவீத ஓட்டுகளும், திமுகவுக்கு 30.9 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. இந்த ஓட்டு வித்தியாசமே அதிமுகவுக்கு அமோக வெற்றியை தேடித்தந்துள்ளது.
திமுகவின் கூட்டணியில் உள்ள காங்கிரசிற்கு 6.4 சதவீத ஓட்டுகளும், பாமகவுக்கு 5.3 சதவீத ஓட்டுகளும், பாஜவுக்கு2.4 சதவீத ஓட்டுகளும் தேமுதிகவுக்கு 2.3 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன.
அதிமுகவுக்கு எதிராக திமுகவுடன் பாமக,பாஜ., தேமுதிக ஆகிய கட்சிகள் சேர்ந்தால் 9.7 சதவீத ஓட்டுகள் மட்டுமே அதிகமாக கிடைக்கும். இதுவும் கூட, அதிமுகவை தோற்கடிக்க போதாது.
இதையெல்லாம் பார்க்கும்போது, தமிழகத்தில் அதிமுக இன்னமும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பது தெளிவாகிறது.