யாழில் கைக்குண்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் கந்தரோடைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்றால் கைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவுமில்லை.
இக் கைக்குண்டு தாக்குதலானது நேற்றிரவு 8.30 மணியளவில் கந்தரோடை உடுவில் வீதி ஞான வைரவர் கோவிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் வசித்து வருகின்ற முரளி என்பவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இனந்தெரியாத கும்பலொன்றால் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் குறித்த நபர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் வகையில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் மூகத்தை முழுதாக மூடிய நிலையில் ஒன்பது பேர் வந்துள்ளனர்.
வந்தவர்கள் குறித்த நபர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்த முயற்சித்த போது குறித்த நபர் தப்பியோட முயன்றுள்ளார். இதன் போதே அவர் மீது கைக்குண்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர். எனினும் கைக்குண்டு வெடிக்கவில்லை.