சமஷ்டிக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது : லக்ஷ்மன் யாப்பா
இலங்கையில் சமஷ்டி ஆட்சி முறையை அமுல்படுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியாது. எனவே இனவாதிகளின் கோரிக்கைக்கு இணங்கி இந்திய மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்காது என்பதில் அரசாங்கத்திற்கு நூறு சதவீத நம்பிக்கை உள்ளதென நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இலங்கையின் சுயாதீன தன்மையில் தலையீடு செய்யும் அதிகாரம் மாநில முதல்வர் என்ற வகையில் ஜெயலலிதாவுக்கும் இந்தி மத்திய அரசுக்கும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கின் தீர்வு திட்ட வரைபுக்கு இந்தியாவின் பங்களிப்பு எத்தகையதாக இருக்குமென ஊடகம் ஒன்று எழுப்பி கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.