இயற்கை அனர்த்தம் ; நாடாளுமன்றில் அடுத்தவாரம் விசேட விவாதம்
நாடாளுமன்ற விசேட அமர்வு எதிர்வரும் 25ஆம் திகதி புதன்கிழமை நடைபபெறவுள்ள நிலையில் அன்றைய தினம் இந்த விவாதம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜுன் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னர் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விசேட அமர்வை நடத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் குறித்து ஒருநாள் விவாதமொன்றை நடத்துவதற்கு கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.