Breaking News

யுத்தக்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் தலையீடு அவசியம்!



இலங்கையில் மேற்கொள்ளப்படும் யுத்தக்குற்ற விசாரணைகளின் போது வெளிநாட்டு நீதிபதிகளின் தலையீடு அவசியம் என கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ வலியுறுத்தியுள்ளார்.

இங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அதனை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க பெறும் பட்சத்திலே நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை அடைய முடியும். போரினால் பாதிக்கப்பட்ட பலரையும் தான் சந்தித்திருப்பதாக தெரிவித்த அவர், அவர்களின் ரணங்களை ஆற்றுப்படுத்துவதற்கு எதிர்க்காலத்தில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யுத்த குற்ற விசாரணைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடனும், சர்வதேச சமூகத்துடனும் இணைந்து பதிலளிக்க இலங்கை உறுதிக்கொண்டுள்ளமையை தான் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தீர்வு காண்பது தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் தாம் தொடர்ந்து இணைந்து செயற்படுவதுடன், இந்த உறுதிப்பாட்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு தேவையான உதவிகளை வழங்கவும் கனடா தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.