இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி
போரில் உயிரிழந்தவர்களுக்கு த.தே. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாத உரையின் ஆரம்பத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
வெள்ளமுள்ளிவாய்க்காலில் நள்ளிரவில் உயிரிழந்த மக்களுக்காக நான் இரங்கல் தெரிவிக்கின்றேன்.ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ஊடாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பயணம் செய்யும் போது எவ்வாறு நட்டம் ஏற்பட்டது.
2006ம் ஆண்டில் 479 மில்லியன் ரூபாவும் 2008ம் ஆண்டு 4800 மில்லியன் ரூபாவும் லாபமீட்டப்பட்டுள்ளது.2008ம் ஆண்டு இந்த நிறுவனத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. அதன் பின்னர் எவ்வாறு நட்டம் ஏற்படுவது.
அரசாங்க நிறுவனங்கள் உரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டால் லாபமீட்ட முடியும்.தமிழ் பேசும் மக்களுக்கு நிறுவனத்தில் உரிய முறையில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை.எந்தவொரு அரசாங்கம் என்றாலும் உரிய முறையில் தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டும்.
உரிய திட்டமிடல்கள் இல்லாத காரணத்தினால் நட்டம் ஏற்படுகின்றது.நூறு நாள் திட்டத்தில் அரசாங்கம் எத்தனை தமிழ் பேசும் மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியுள்ளது.மக்களுக்கு தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.