Breaking News

நரேந்திர மோடி இரங்கல்: நிவாரணங்களுடன் இந்திய கடற்படை கப்பல்



இந்தியாவிலிருந்து கடற்படைக் கப்பல்கள் மூலம் இன்று வெள்ளிக்கிழமை நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான நிவராணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எஸ் சட்லெஜ் ஆய்வுக்கப்பல் கொச்சி கடற்படைத் தளத்திலிருந்து கொழும்பிற்கு சென்றுள்ளது.மற்றுமொரு கடற்படை ரோந்து கப்பலான சுனன்யா நிவாரணப்பொருட்களுடன் விரைவில் ஸ்ரீலங்காவிற்கு செல்லவுள்ளதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக நாட்டின் பல பாகங்களிலும் தொடரும் மழை மற்றும் மண்சரிவு காரணமாக 40 ற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனர்த்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் அவசர உதவிகளை இந்தியா உடனடியாக வழங்கும் என தெரிவித்துள்ளார்.