தமிழக சட்டசபை தேர்தல் முக்கிய தலைவர்கள் பின்னடைவு
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேமுதிக மக்கள் நலக் கூட்டணி, அதிமுக மற்றும் பா.ம.க கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பா.ம.க., முதல்-அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் பின் தங்கியுள்ளார். ஜி.கே.மணி, காடுவெட்டி குரு ஆகியோரும் பின் தங்கியுள்ளனர்.அதிமுக வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்தாலும் அக்கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் சிலர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
சென்னை அண்ணாநகர் தொகுதியில் கோகுல இந்திரா பின் தங்கியுள்ளார். அதேபோல் திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன், பல்லாவரம் தொகுதியில் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் பின் தங்கியுள்ளனர். அதிமுக கூட்டணியில் உள்ள செ.கு.தமிழரசன் பின் தங்கியுள்ளார்.
திமுகவை பொறுத்தவரை துரைமுருகன், கே.என்.நேரு, ஜெ.அன்பழகன் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் தங்களது தொகுதியில் முன்னிலையில் உள்ளனர்.