Breaking News

முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்



முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தின் அபிவிருத்தியில், அரசாங்கமும் கல்விசார் அதிகாரிகளும் அக்கறைச் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) முல்லைத்தீவு நகர்ப்பகுதியில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை, முல்லைத்தீவு மாவட்ட செயலகப் பகுதியில் ஆரம்பித்து, முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிமனைவரை பயணித்த, இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், முல்லைத்தீவு மகா வித்தியாலய பழைய மணவர்கள், பெற்றேர் மற்றும் நலன் விரும்பிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இதன்போது, குறித்த பாடசாலையில் இடம்பெறும் ஆசிரிய இடமாற்றங்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தியினை பாதிக்கும் விடயங்கள் தொடர்பில், சம்பத்தப்பட்டவர்கள் அக்கறை செலுத்தவேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.

குறித்த பாடசாலையில் கற்பித்த ஒன்பது ஆசியரியர்கள் அண்மையில் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.