Breaking News

கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவது அனைவரதும் பொறுப்பு

அரசினுடைய பணிகளை நிறைவேற்றும் போது, அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையில் பிரிவுகளை பார்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவது அனைவரதும் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் 30வது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு, ஊழியர்களை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்