பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலையினால் மக்கள் பெரும்அசௌகரியங்களை எதிர்நோக்கிவரும் நிலையில்மாணவர்களின் பாதுகாப்புக்கருதி இன்றைய தினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெ ளி யிடுகையிலேயே கல்வி அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் அக்கிலவிராஜ்.
நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலையினால் மக்கள் பெரும்அசௌகரியங்களை எதிர்நோக்கிவரும் நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க பாடசாலைகள்முற்று முழுவதுமாகவும் பகுதியளலும் பாதிப்படைந்துள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சுக்கு தகவல்கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் பாடசாலை மாணவர்கள் தமது பாடபுத்தகங்கள், சீருடைகள், சப்பாத்துக்கள் உட்பட பாடசாலை உபகரணங்கள்உட்பட பெரும்பாலவற்றை வெ ள்ள அனர்த்தம் உட்பட மண்சரிவு பாதிப்புகளினால்இழந்துள்ளனர்.
கல்வி அமைச்சிக்கு தற்போது வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தினால் ஒரு அதிபர் உள்ளடங்களாக 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் நாட்டின் சீரற்ற காலநிலையினை கருத்தில்கொண்டும் இன்று 20 ஆம் திகதி நாட்டில்காணப்படும் அரச,தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகின்றது அந்தவகையில்விடுமுறை தொடர்பிலான கல்வி அமைச்சின்அறிக்கையானது வலய கல்வி பணியகத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார்.