Breaking News

இன்று மீண்டும் மழை ஆரம்பம் – வளிமண்டலவியல் திணைக்களம்



நாட்டின் பல பாகங்களிலும் மீண்டும் இன்று (23) முதல் மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த மூன்று தினங்களாக நாட்டில் பெய்து வந்த அடை மழை சற்று ஓய்ந்து காணப்பட்டதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேல், வட மேல், தெற்க, மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கு விசேடமாக இன்று முழுநாளும் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் திணைக்களத்தின் நிரந்தர பிரதிநிதி மலிந்த மில்லன்கொட குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்துக்கு இன்று மாலை 2.00 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.