Breaking News

புனர்வாழ்வு அமைச்சினை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் சி.வி



வடமாகாணசபை அமைச்சர் சத்திய லிங்கத்திடமிருந்த, சிறுவர் பாதுகாப்பு, மற்றும் புனர்வாழ்வு அமைச்சினை மீண்டும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகின்றார்.

வடமாகாணசபை நிறுவப்படும் போது, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் காணப்பட்ட இந்த அமைச்சுக்கள் பா.சத்தியலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் நிதியத்தின் ஊடாக பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் இந்த திணைக்களங்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண முதல்வர் குறிப்பிட்டார்.

இன்று (திங்கட்கிழமை) மாலை வடமாகாண அமைச்சரவை மாற்றம் தொடர்பில் முக்கியமான ஒரு கலந்துரையாடல் நடைபெறவுள்ள நிலையில், சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.