மீள்குடியேற்றங்களை நல்லாட்சி அரசு துரிதப்படுத்த வேண்டும்
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள மக்கள நல்லாட்சி அரசாங்கத்தினாலும் மீள்குடியேற்ற முடியவில்லையென சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் நீதியமைச்சின் கீழ் உள்ள மத்தியஸ்தர் சபைகள் (காணி) ஸ்தாபித்தல் மற்றும் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வலிகாமம் வடக்கு பகுதியில் ஆறு மாதங்களுக்குள் மக்களை மீள்குடியேற்றம் செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
எதிர்வரும் ஜுன் மாதம் நிறைவடைவதற்கு முன்னர் குறித்த பகுதி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும்.
எனினும் மீள்குடியேற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் நல்லாட்சி அரசாங்கத்தில் காணப்படவில்லையென அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவில் துரிதப்படுத்த வேண்டும் எனவும். தமிழ் மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண காணி அமைச்சும் நீதி அமைச்சும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் எனவும் விஜயகலா மகேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.