Breaking News

ஜெயாவுக்கு வடக்கு முதல்வர் வாழ்த்து

தமிழக முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக தெரிவாகியுள்ளமைக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.


அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக தெரிவாகியுள்ளமைக்கு ஈழத்தமிழ் மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.வருங்காலத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்வார் என எதிர்பார்க்கிறேன்.

தமிழ் நாட்டு மக்கள் மீண்டும் அவரையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளமை மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கை எடுத்துக் காட்டுகின்றது.அதனால் தொடர்ந்து அவர் தமிழக மக்களுக்கும் ஈழத்து தமிழ் மக்களுக்கும் பல நன்மைகள் செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன் என அவர் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.