Breaking News

தீவிரவாதத்திற்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டத்தை நிறுத்துவது முட்டாள்தனம்: மஹிந்த



தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்டு வெற்றிகொண்ட தேசிய இராணுவ தினத்தை கொண்டாடுவதை நிறுத்துவதனை தான் ஒரு முட்டாள்தனமான செயலாகவே கருதுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி, உடநுவர பிரதேச விகாரையொன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இராணுவ வீரர்கள் தினத்தை நிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வெற்றியானது நாட்டின் வெற்றியாகும். தீவிரவாதத்திற்கு எதிராக முன்னெடுத்த போராட்டத்தில் நாம் வெற்றி கொண்டதை கொண்டாடவில்லையெனின் அது முட்டாள்தனமாகும்.

எமது இந்த போராட்டத்தினாலேயே யாழில் உள்ள சிறுவர்கள் இன்று பாடசாலைக்கு சுதந்திரமாக சென்று வரக்கூடியதாக உள்ளது. மக்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்கக் கூடியதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.