வட மாகாணசபை சமஸ்டி கோரி பிரேரணை நிறைவேற்றும் உரிமை கிடையாது..!!
வட மாகாணசபை சமஸ்டி கோரி பிரேரணை நிறைவேற்றும் உரிமை கிடையாது என நான் எங்குமே உரையாற்றவில்லையெனத் தெரிவித்த ஆளுநர் ஆதாரமாக உரையின் இறுவெட்டினையும் வட மாகாண சபைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
வட மாகாணசபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பிற்கான யோசணையில் சமஸ்டி முறையிலான தீர்வை முன்வைத்து அது பிரேரணையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த பிரேரணை தொடர்பில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கொழும்பில் கருத்து வெளியிட்டதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தது.
இவ்வாறு செய்திகள் வெளிவந்தமையினையிட்டு குறித்த செய்தியினையும் மேலும் இரு செய்திகளின் பிரகாரமும் ஆளுநர் தனது பொறுப்பின் எல்லையை மீறி விட்டார்அதனால் அவராக பதவி விலகவேண்டும் அல்லது ஜனாதிபதி அவரை மீளப் பெறவேண்டும் . என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ரெலோவின் செயலாளர் சிறீக்காந்தா பகிரங்க வேண்டுகோள் ஒன்றை செய்தியாளர் மாநாட்டில் விடுத்திருந்தார்.
இதனையடுத்து குறித்த விடயம் சர்ச்சையானதால் வட மாகாண ஆளுநர் குறித்த விடயம் தொடர்பில் தான் ஆற்றிய உரையில்தமக்குஎதுவேண்டும்எனகோரும்உரிமைஓர்மாகாணத்துக்குஉண்டுஅவர்கள்எதைக்கோரினாலும்அது சட்டம் ஆக்கப்படவேண்டும்.
சட்டத்தினை பாராளுமன்றமே உருவாக்கும் என்ற கருத்தையே தெரிவித்ததாக கூறியுள்ளதுடன் இதற்கு ஆதாரமாக தான் ஆற்றிய உரையின்இறு வெட்டின் ஓர் பிரதியினையும் சமர்ப்பித்துள்ளார்.
இதனால் ஆளுநரால் சமர்ப்பிக்கப்பட்ட இறுவெட்டு அடுத்த மாகாண அமர்வில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.