Breaking News

சர்வதேசத்துக்கு அஞ்சியே தமிழர் பிரச்சினையை அரசாங்கம் கையிலெடுக்கின்றது



சரவதேச அழுத்தங்களுக்கு அஞ்சியும் சர்வதேச ஆதரவை தக்கவைக்கவும் மாத்திரமே தமிழர்களின் பிரச்சினைகளை அரசாங்கம் கையில் எடுக்கின்றது. அதையும் தாண்டி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது. 

யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் வடக்கு மீட்கப்பட்டதாக அர்த்தமில்லை. அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டது. 

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் சர்வதேசம் தம்மை கைவிடும் என அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் இனப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் நகர்வுகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு எவ்வாறானது என கொழும்பு ஊடகம் ஒன்று வினைவியபோதே கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக மேற்கண்டவாறு தெரிவித்தார்.