திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...!சுவாரிசம் ஆனால் உண்மை
மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற திருமாவளவன் வெற்றியை இன்னொரு திருமாவளவன் தடுத்து இருக்கிறார். ஆம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தோற்றிருப்பது 87 வாக்குகள் வித்தியாசத்தில்.
ஆனால், அதே காட்டுமன்னார் கோவிலில் திருமாவளவன் என்கிற பெயரில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பெற்றிருப்பது 289 வாக்குகள். ஒரு வேளை இந்த வாக்குகள் விசிக வுக்கு கிடைத்து இருந்தால், மக்கள் நலக் கூட்டணிக்கு ஒரு ஆறுதல் இடமாவது கிடைத்திருக்கும். ஆனால், அதுவும் தேர்தல் தந்திரங்களால் வீழ்த்தப்பட்டு இருக்கிறது.