Breaking News

முள்ளிவாய்க்கால் படுகொலை அஞ்சலி நிகழ்வு மன்னாரில் (படங்கள் இணைப்பு)



முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்ட 7 ஆம் ஆண்டு நினைவு நாள் மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், மன்னார் நகரசபை பண்டபத்தில் இன்று புதன்கிழமை காலை 10.30 அளவில் நிகழ்வு நடைபெற்றது.இறுதியுத்தத்தின்போது படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது ஈகைச்சுடரை முள்ளிவாய்க்காலில் பெற்றோரை இழந்து வாழும் சிறுமி பிரிந்தா சந்திரசேகர் ஏற்றிவைத்தார்.மலர்மாலையை முள்ளிவாய்க்காலில் கணவனை இழந்த கேதீஸ்வரன் பத்மினி அணிவித்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், மதகுருமார்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.