எதிர்க்கட்சித் தலைவருக்கு பொருத்தமான உத்தியோகபூர்வ இல்லம் கிடையாது!
எதிர்க்கட்சித் தலைவருக்கு பொருத்தமான உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை. ஜனாதிபதி பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் காணப்படுகின்றன.
எனினும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இதுவரையில் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லம் பொருத்தமானதல்ல.
தற்போது சம்பந்தனுக்கு அடுக்கு மாடி வீடு ஒன்றின் மேல்மாடியே வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடி வீட்டின் படுக்கை அறை மேல் மாடியில் காணப்படுகின்றது. இந்த வீட்டுக்கு செல்ல 28 படிகளை ஏறிச் செல்ல வேண்டியுள்ளது.
இந்த வீட்டின் கதவுகள் சேதமடைந்துள்ளதாகவும் பழமையானது எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிஇ பிரதமர், சபாநாயகர், அமைச்சர், பொலிஸ் மா அதிபர்இ இராணுவத் தளபதி உள்ளிட்ட அனைவருக்கும் தங்களது பதவிகளுக்கு பொருத்தமான உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் எதிர்க்கட்சித் தலைவரின் வயது மூப்பைக் கூட கருத்திற் கொள்ளாது பொருத்தமற்ற உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் சிங்களப் பத்திரிகையொன்றின் ஊடகவியலாளர் சம்பந்தனை நேர்காணல் செய்ய சென்ற போது மிகவும் சிரமத்துடன் படிகளில் ஏறி வீட்டை அடைவதனை நேரில் அவதானித்துள்ளார்.
எனவே எதிர்க்கட்சித் தலைவருக்கு பொருத்தமான உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.