யாழ். மாவட்டத்திற்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனம்
யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன இன்று (வியாழக்கிழமை) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
அதன்படி யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று காலை 10.00 மணியளவில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர், பௌத்த, இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மத வழிபாட்டினை தொடர்ந்து பதிவேட்டில் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாத்தளை பொலிஸ் பிரிவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய இவர் யாழிற்கான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டார்.
கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சட்டம் மற்றும் நீதிக்கு அமைவாக யாழில் நடைபெறும், குற்றச்செயல்களை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை நீதியின் வழியில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.