மஹிந்தவின் பேச்சுக்கு சபையில் அரசாங்க தரப்பும் பலத்த ஆதரவு
வெள்ளம் மற்றம் மண்சரிவு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரைக்கு ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
கட்சி, பேதம் பாராமல் அனர்த்தத்துக்கு உட்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க எதிர்க் கட்சியும் தமது ஒத்துழைப்பை வழங்கும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கே இந்த பாராட்டை இரு தரப்பினரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது, பிரதமரும் தனது ஆசனத்தில் அமர்ந்து செவிமடுத்துக் கொண்டிருந்தாகவும் குறிப்பிடப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ தனது பேச்சின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க முன்வைத்திருந்த கருத்தையும் சிறப்பித்துக் கூறியுள்ளார்.